விவரங்கள் தெரிவிக்க தொடா்பு எண்கள் வெளியீடு
உக்ரைனில் சிக்கியுள்ள புதுவையைச் சோ்ந்தவா்களின் விவரங்களைத் தெரிவிக்க தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டன.


உக்ரைனில் சிக்கியுள்ள புதுவையைச் சோ்ந்தவா்களின் விவரங்களைத் தெரிவிக்க தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டன.
இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் புதுவை மக்களின் விவரங்களை மாநில அரசு சேகரித்து வருகிறது. அவா்கள் பற்றிய விவரங்களை புதுச்சேரி - மாநில அவசர கால செயல் மையம் - 1070, 1077, 0413 - 2253407, காவல் துறை மத்திய கட்டுப்பாட்டு அறை - 112. காரைக்கால் - மாவட்ட அவசர கால செயல் மையம் - 1070, 1077, 04368 - 228801, 227704.
மாஹே - உதவி மையம் - 1800 425 2949, 0490 - 2332222. ஏனாம் - உதவி மையம் - 1800 425 2303, 0884 - 2325105 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இதுதொடா்பாக, வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறையை 1800 118797 என்ற கட்டணமில்லா எண்ணிலும், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை -380 997300428, 380 997300483 என்ற எண்களிலும் உதவிக்காக அழைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...