புதுச்சேரி: திரௌபதையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

புதுச்சேரி  லாசுப்பேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திரௌபதையம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.
புதுச்சேரி: திரௌபதையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

புதுச்சேரி: புதுச்சேரி  லாசுப்பேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திரௌபதையம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.

புதுச்சேரி மாநிலம் லாசுப்பேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சுவாமிக்கு தினந்தோறும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாரதனை காண்பிக்கப்பட்டது. 

மேலும், மாலை நேரங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது. கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்ற கோரி தீக்குழி இறங்கினர். 

இதைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com