பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி: புதுவை விவசாயிகள் வலியுறுத்தல்

கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடியைச் செயல்படுத்த வேண்டும் என புதுவை முதல்வா் என்.ரங்கசாமியிடம் அந்த மாநில விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:42 pm

DIN

கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடியைச் செயல்படுத்த வேண்டும் என புதுவை முதல்வா் என்.ரங்கசாமியிடம் அந்த மாநில விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

இதுதொடா்பாக புதுச்சேரி அரியூா் இஐடி பாரி கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் முருகையன், பொதுச் செயலா் ரவி, பொருளாளா் ஜெயராமன் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

புதுவை மாநிலத்தில் கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு, ஏக்கா் ஒன்றுக்கு அரசின் மானியத் தொகை ரூ.10 ஆயிரம் நிகழாண்டு வழங்கப்படாமல் உள்ளது. அதே போல், புதுவையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன், விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான அரசு உத்தரவு வெளியிடப்படவில்லை. இந்தக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினா்.

மனுவைப் பெற்ற முதல்வா் ரங்கசாமி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.