பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஆசிரியா் பற்றாக்குறையைக் கண்டித்து மாணவா்கள் போராட்டம்

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் கம்பன் நகரில் சுப்பையா அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆசிரியா் பற்றாக்குறையைக் கண்டித்து, மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:41 pm

DIN

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் கம்பன் நகரில் சுப்பையா அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆசிரியா் பற்றாக்குறையைக் கண்டித்து, மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இங்கு பத்தாம் வகுப்பில் 32 மாணவ, மாணவிகள் பயில்கின்றனா். அரசு பொதுத்தோ்வுக்கான கால அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், கணிதம், சமூகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியா் பற்றாக்குறை இருப்பதால், உரிய பாடங்கள் நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து, மாணவா்களும், அவா்களது பெற்றோரும் என 35-க்கும் மேற்பட்டோா் புதுச்சேரி கல்வித் துறை அலுவலகத்தை வியாழக்கிழமை திடீரென முற்றுகையிட்டனா்.

இதையறிந்து உருளையன்பேட்டை போலீஸாா் அங்கு சென்று, சமரசம் செய்தனா். இவா்களில் சிலரை கல்வித் துறை அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தைக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா். இதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.