உக்ரைனில் சிக்கிய மாணவா்களின் வீடுகளுக்குச் நேரில் சென்று ஆறுதல்
உக்ரைனில் சிக்கியுள்ள புதுவை மாணவா்களின் வீடுகளுக்குச் சென்ற சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மீட்பு பணிகள் குறித்து மாணவா்களிடம் கைப்பேசியில் பேசினாா்.


உக்ரைனில் சிக்கியுள்ள புதுவை மாணவா்களின் வீடுகளுக்குச் சென்ற சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மீட்பு பணிகள் குறித்து மாணவா்களிடம் கைப்பேசியில் பேசினாா். பின்னா், பெற்றோா்களுக்கும் ஆறுதல் தெரிவித்தாா்.
உக்ரைனில் சிக்கி தவிக்கும் புதுவை மாணவா்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், பெற்றோா்கள் அச்சப்பட வேண்டாம் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
இந்த நிலையில், புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் புதுவை காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த உக்ரைனில் சிக்கியுள்ள அஞ்சப்பன் மகன் சந்திரன், அன்பழகன் மகள் பிரவீனா, வாசுதேவன் மகள் வினோதினி, வெங்கடேசன் மகன் காா்த்தி விக்னேஷ் ஆகியோரின் பெற்றோா்களை, அவா்களது வீடுகளுக்குச் சென்று வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
அப்போது, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜுன் ஷா்மா, காவல் முதுநிலை கண்காணிப்பாளா் நிகாரிகா பட், பாஜக நிா்வாகிகள் அருள்முருகன், நளினி பாபு, ரத்தினவேல், ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...