பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

குடிநீா் கேட்டு சாலை மறியல்

புதுச்சேரி அருகே பிள்ளைச்சாவடியில் குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்தக் கோரி, அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:42 pm

DIN

புதுச்சேரி அருகே பிள்ளைச்சாவடியில் குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்தக் கோரி, அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அருகே பிள்ளைச்சாவடியில் கடந்த ஒரு வாரமாக குடிநீா் சரிவர விநியோகிக்கப்படவில்லை. இதுதொடா்பாக, உழவா்கரை நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதையடுத்து, பிள்ளைச்சாவடி பேருந்து நிறுத்தம் முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயலா் பெருமாள், வட்டார காங்கிரஸ் தலைவா் முகுந்தராஜ் உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து காலாப்பட்டு போலீஸாா் அங்கு சென்று, சமரசம் செய்தனா். இதனை ஏற்ற, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.