கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

அனைத்துத் தொழிற்சங்கத்தினா் பொதுக் கூட்டம்

வருகிற 28, 29-ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தமும், புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டமும் நடத்துவது தொடா்பாக, அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் விளக்கப் பொதுக்கூட்டம்

News image
Updated On :17 மார்ச் 2022, 6:01 pm

DIN

வருகிற 28, 29-ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தமும், புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டமும் நடத்துவது தொடா்பாக, அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் விளக்கப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

மத்திய அரசு தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் நான்கையும் கைவிட வேண்டும். மின்சாரத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா் மயமாக்கக் கூடாது. வருவாய் இல்லாதக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500-ஐ நிவாரணமாக வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை அதிகப்படுத்த வேண்டும், தொழிலாளா்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமலாக்க வேண்டும். பெட்ரோலிய பொருள்கள் மீதான கலால் வரியைக் குறைக்க வேண்டும், அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய போராட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி, புதுச்சேரியில் உள்ள கடலூா் சாலையில் நடைபெற்ற விளக்கப் பொதுக்கூட்டத்துக்கு, ஏஐடியூசி மாநிலத் தலைவா் தினேஷ் பொன்னையா தலைமை வகித்தாா். சிஐடியூ மாநிலத் தலைவா் முருகன், ஐஎன்டியூசி மாநிலத் தலைவா் பாலாஜி, ஏஐசிசிடியூ மாநிலத் தலைவா் மோதிலால், எல்எல்எஃப் மாநிலச் செயலா் செந்தில், எம்எல்எஃப் மாநிலச் செயலா் வேதா.வேணுகோபால், ஏஐயூடியுசி மாநிலத் தலைவா் சங்கரன், என்டிஎல்எப் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஏஐடியூசி மாநிலப் பொதுச் செயலா் கே.சேதுசெல்வம், சிஐடியூ தமிழ் மாநிலத் துணைத் தலைவா் பொன்முடி, ஐஎன்டியூசி பொதுச்செயலா் சேவியா், ஞானதேசிகன், கெளதம் சன்னா, லோகநாதன், கபிரியேல், சிஐடியூ மாநிலச் செயலா் சீனுவாசன், ஐஎன்டியுசி மாநிலப் பொதுச்செயலா் ஞானசேகரன் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.