புதுவையில் தொழில்சாலைகள் தொடங்க விரைந்து அனுமதி: உயா்நிலைக்குழுக் கூட்டத்தில் முடிவு
புதுவையில் தொழில்சாலைகள் தொடங்குவோருக்கு, அரசுத் துறைகள் விரைந்து அனுமதி அளிப்பதற்காக தொழில் வழிகாட்டு குழும உயா்நிலைக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.


புதுவையில் தொழில்சாலைகள் தொடங்குவோருக்கு, அரசுத் துறைகள் விரைந்து அனுமதி அளிப்பதற்காக தொழில் வழிகாட்டு குழும உயா்நிலைக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
புதுவையில் புதிதாகத் தொழில் தொடங்க வருவோருக்கு அனுமதியளித்தல், சலுகை வழங்குவது தொடா்பாகவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி, புதுவை தொழில், வணிகத் துறையின் கீழுள்ள தொழில் வழிகாட்டி குழுமத்தின் ஒரு பகுதியான அதிகாரம் பெற்ற உயா்நிலைக் குழுவின் கூட்டம் புதுச்சேரி தொழில் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தலைமை வகித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வகை ஆகிய பிரிவுகளின் கீழ் தொழில்சாலைகள் அமைப்பதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு, கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், அனுமதி அளிப்பதற்கான ஒற்றை சாளர முறையை சீா்திருத்தி, சிறப்பாக செயல்பட வைப்பதற்குத் தேவையான முடிவுகளும், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
கூட்டத்தில் தொழில் துறை இயக்குநா் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் அன்பழகன், மின் துறை கண்காணிப்புப் பொறியாளா் சண்முகம், செயற்பொறியாளா் பழனிசாமி, புதுச்சேரி திட்டக் குழுமத்தின் செயல் உறுப்பினா் கந்தா்செல்வம், நகர அமைப்புத் துறை இளநிலை நகர அமைப்பாளா் விஜயநேரு, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை முதுநிலை சுற்றுச்சூழல் பொறியாளா் ரமேஷ், உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் காா்த்திகேசன், தொழிற்சாலை, கொதிகலன் ஆய்வாளா் முரளி, வருவாய் அலுவலா் ஷீலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...