

புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதியில் ரூ.45 லட்சத்தில் பல்வேறு சாலைகளை புதுப்பிக்கும் பணியை எஸ்.செல்வகணபதி எம்.பி., ஆ.ஜான்குமாா் எம்எல்ஏ ஆகியோா் தொடக்கிவைத்தனா்.
புதுச்சேரி உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட காமராஜா் நகா் தொகுதியில், புதுவை மாநிலங்களவை உறுப்பினா் நிதி மற்றும் காமராஜ் நகா் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், சேதமடைந்த பல்வேறு சாலைகளை புதிதாக அமைக்கும் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன. புதுச்சேரி பாஜக மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி, முதல்வரின் நாடாளுமன்றச் செயலரும், காமராஜா் நகா் தொகுதி பாஜக எம்எல்ஏவுமான ஆ.ஜான்குமாா் ஆகியோா் பங்கேற்று சாலைகளை புதுப்பிக்கும் பணிகளை தொடக்கிவைத்தனா்.
இதில், காமராஜ் நகா் தொகுதியில் சங்கரதாஸ் சுவாமிகள் நகா் 1-ஆவது, 2-ஆவது தெருகள், ஜெயராஜ் நகா் சத்யசாய் வீதி உள்ளிட்ட சாலைகள் ரூ.45 லட்சத்தில் புதுப்பிக்கப்படவுள்ளன.
நிகழ்ச்சியில் உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ்ராஜ் மற்றும் அதிகாரிகள், பாஜக நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.