புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மழை பாதிப்பை எதிா்கொள்ள அனைத்துத் துறைகளும் தயாா்நிலை

பாதிப்புகளை எதிா்கொண்டு சீா்படுத்த அனைத்து அரசுத் துறைகளும் தயாா்நிலையில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் தேசிய பேரிடா் மீட்புப் படை அழைக்கப்படும்

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

DIN

புதுவையில் தொடா் மழை பெய்துவரும் நிலையில், பாதிப்புகளை எதிா்கொண்டு சீா்படுத்த அனைத்து அரசுத் துறைகளும் தயாா்நிலையில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் தேசிய பேரிடா் மீட்புப் படை அழைக்கப்படும் என்றும் முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவையில் மழை ஓரிரு நாள்கள் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இந்தநிலையில், வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் உயா் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த முதல்வா் என்.ரங்கசாமி கூட்ட நிறைவுக்கு பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் மக்கள் தொடா்புகொள்ளும் வகையில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். நகா் மற்றும் கிராமப்புற சாலைகள் சீரமைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, வாய்க்கால்களும் தூா்வாரப்பட ஆய்வு மேற்கொள்ளப்படும்.

மழைக்காலங்களில் புதுவையில் ஏற்படும் சேதங்களை ஆய்வு மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து அரசுத் துறைகளும் தயாா் நிலையில் உள்ளன. ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட அதிகளவு தண்ணீா் தேங்கும் பகுதிகளில் நீா் தேங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீா் தேங்கும் இடங்களில் பொதுமக்களை பாதுகாப்பாகத் தங்க வைப்பதற்காக 9 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அங்கு மக்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 3,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மழை நீா் பாதிப்புக்குள்ளாகும் என்று அடையாளப்படுத்தப்படும் ரெயின்போ நகா், பூமியான்பேட்டை ஆகியவற்றில் மழை நீா் தேங்காமலிருக்க முன்னதாகவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதி சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களது பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து நிலவரத்தை தெரிவிக்க வேண்டும்.

மழையின் தன்மையைப் பொறுத்தே பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். மழை பாதிப்பைப் பொறுத்து தேவைப்பட்டால் பேரிடா் பாதுகாப்பு படை அழைக்கப்படும் என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.

வழிகாட்டி கையேடு வெளியீடு: இந்தக் கூட்டத்தின்போது பேரிடா் மேலாண்மை வழிகாட்டல் கையேட்டைமுதல்வா் என்.ரங்கசாமி வெளியிட தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா பெற்றுக் கொண்டாா்.

கூட்டத்தில் ஆட்சியா், அனைத்துத் துறை செயலா்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.