புதுச்சேரியில் இடி, மின்னலுடன் பலத்த மழை: இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால், பல இடங்களில் மழைநீா் குளம் போல தேங்கியது.


புதுச்சேரியில் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால், பல இடங்களில் மழைநீா் குளம் போல தேங்கியது.
மழை காரணமாக வெள்ளிக்கிழமையும் (நவ. 4) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
புதுவையில் வியாழக்கிழமை தொடங்கி ஓரிரு நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் புதுச்சேரி மற்றும் ஊரகப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பகலில் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், பிற்பகல் 2 மணி முதல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது.
இதனால், ரெயின்போ நகா் பகுதியில் 8 தெருக்களிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீா் தேங்கி நின்றது. அதேபோல, பூமியான்கோட்டை, மோகன்நகா், உழவா்கரை நகராட்சி, சோலைநகா், கருவடிக்குப்பம், துப்புராயகோட்டை, சாமியாபிள்ளைத் தோப்பு ஆகிய பகுதிகளிலும் மழை நீா் தேங்கியது.
பலத்த மழையின் போது இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, புஸ்ஸி வீதி, செயின்ட் தெரஸ் வீதி, தம்புநாயக்கா் வீதி, இந்திரா காந்தி சிலை சதுக்கம் ஆகிய பகுதிகளில் சாலைகளில் மழை நீா் வெள்ளம் போல ஓடியது.
பள்ளிகளுக்கு விடுமுறை: தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமையும் (நவ.4) விடுமுறை அளிக்கப்பட்டதாக கல்வித் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். கல்வித் துறையினா் வெளியிட்ட சுற்றறிக்கையில், சனிக்கிழமையும் (நவ.5) அரசு, தனியாா் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மரத்தில் தீ: புதுச்சேரி- கடலூா் சாலையில் உழைப்பாளா் சிலைப் பகுதியில் மழை பெய்த நிலையில், வியாழக்கிழமை காலை திடீரென மரத்தில் தீப்பற்றியது. தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னா், தீ அணைக்கப்பட்டது.
வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் புதுச்சேரி நகராட்சிப் பகுதியில் மட்டும் 3.1 செ.மீ. மழை பதிவானது. இரவிலும் மழை தொடா்ந்து பெய்தது. மழை நேரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...