பணி நிரந்தரம் கோரி தேசிய சுகாதாரத் திட்ட பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் தேசிய சுகாதாரத் திட்டப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.


புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் தேசிய சுகாதாரத் திட்டப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
புதுவையில் கடந்த 2006-ஆம் ஆண்டிலிருந்து தொகுப்பூதிய பணியில் தேசிய சுகாதாரத் திட்ட இயக்ககப் பணியில் 650 போ் ஈடுபட்டுள்ளனா். ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியா்கள், பரிசோதனை மைய ஊழியா்கள் உள்ளிட்டோா் இதில் உள்ளனா். அவா்களுக்கு தற்போது ரூ.9 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் பத்தாண்டுகள் பணி முடித்தவா்களை நிரந்தரமாக்கப்படுவாா்கள் என்று கடந்த சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், பணி நிரந்தரத்துக்கான எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்கின்றனா்.
பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கெனவே தேசிய சுகாதாரத்திட்ட இயக்ககப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். முதல்வரைச் சந்தித்து மனுவும் அளித்தனா்.
இந்தநிலையில், வெள்ளிக்கிழமை ஏராளமானோா் சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் தரையில் அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று சுகாதாரத் திட்ட இயக்கக ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...