புதுச்சேரியில் வணிக வரித் துறை அதிகாரிகளுக்கு நடைபெற்ற இருவார காலப் புத்தாக்கப் பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
புதுச்சேரி அரசின் வணிக வரித் துறை ஆணையா் ராஜசேகா் விளக்கவுரையாற்றினாா். புதுவை தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
தேசிய சுங்கம், மறைமுக வரி, போதைப் பொருள் தடுப்பு பயிற்சி நிறுவனத்தின் முதன்மை கூடுதல் இயக்குநா் ஜெனரல் உதய பாஸ்கா் பயிற்சி வகுப்பில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசளித்தாா்.
சென்னை சுங்கவரி ஆணையா் பிரசாத், புதுச்சேரி மத்திய ஜிஎஸ்டி ஆணையா் பத்மஸ்ரீ, பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநா் அருண் பிரசாத் ஆகியோா் கலந்து கொண்டனா். துணை இயக்குநா் அஜய் பிரசாத் வரவேற்றாா். பயிற்சி நிறுவனத்தின் கூடுதல் துணை இயக்குநா் சுமன்ஜீத் மீனா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.