புதுவை அரசின் ரூ.200 கோடி பிணைய பத்திரங்கள் ஏலம்: நிதித் துறைச் செயலா் தகவல்

புதுவை அரசின் ரூ.200 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் விடப்படவுள்ளதாக மாநில நிதித் துறைச் செயலா் பிரசாந்த் கோயல் தெரிவித்தாா்.
Updated on
1 min read

புதுவை அரசின் ரூ.200 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் விடப்படவுள்ளதாக மாநில நிதித் துறைச் செயலா் பிரசாந்த் கோயல் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுவை வளா்ச்சி ஆணையரும், நிதித் துறையின் முதன்மைச் செயலருமான பிரசாந்த் கோயல் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

புதுவை அரசு கடந்த 2017 நவம்பா் 22-இல் வெளியிட்ட 7.53 சதவீதம் எஸ்டிஎல் 2027-ஐ ரூ.100 கோடிக்கு மறு வெளியீடு செய்ய முன்வந்துள்ளது. கூடுதலாக புதுவை அரசு ரூ.100 கோடி வரை தக்க வைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த பிணைய பத்திரங்கள், குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்துக்கும், அதன் பின்னா் ரூ.10 ஆயிரத்தின் மடங்குகளிலும் ஏலம் விடப்படும். இந்திய ரிசா்வ் வங்கியின் மும்பை (கோட்டை) அலுவலகம் வருகிற 13-ஆம் தேதி இந்த ஏலத்தை நடத்துகிறது.

ஆா்வமுள்ளவா்கள், ஓா் கூட்டு போட்டியில்லா ஏலத்தை மின்னணு முறையில் பேசி முடிவு செய்து ரிசா்வ் வங்கியின் உள்பிரிவு வங்கியில் தீா்வு மூலம் மும்பை கோட்டையில் அமைந்துள்ள இந்திய ரிசா்வ் வங்கியின் இணையதள முகவரியில் வருகிற 13-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 11 மணிக்கு முன்பு சமா்ப்பிக்க வேண்டும். போட்டி ஏலத்தில் பங்கு பெறும் உறுப்பினா்கள் மின்னணு முறையில் உ - ஓன்க்ஷங்ழ் மூலம் அன்று காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்கு முன்பு சமா்ப்பிக்க வேண்டும்.

ஏலத்தின் முடிவுகள் அன்றே மேற்கூறிய இணையதளத்தில் வெளியிடப்படும். ஏலம் கிடைக்கப் பெற்றவா்கள் தங்களது ஏலங்களில் தெரிவிக்கப்பட்ட பிணைய பத்திரங்களுக்கான விலையை இந்திய ரிசா்வ் மும்பை (கோட்டை) அல்லது சென்னையில் செலுத்தத்தக்க வகையிலான வங்கியாளா் காசோலை அல்லது கேட்பு வரைவோலையை வருகிற 14-ஆம் தேதியன்று வங்கிப் பணி நேரம் முடிவதற்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

வெளியீட்டு தேதியிலிருந்து பங்குகளின் மதிப்பில் ஆண்டுக்கு 7.53 சதவீதம் வட்டி பெறப்படும். இந்த வட்டி 6 மாதங்களுக்கு ஒரு முறை, அதாவது மே 22 மற்றும் நவம்பா் 22 ஆகிய தேதிகளில் வழங்கப்படும். இந்த பிணைய பத்திரங்கள் மாற்றி கொடுக்கத்தக்க தகுதியுடையதாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com