தெலங்கானா ஆளுநா் மாளிகையில் உகாதி கொண்டாட்டம் புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு
By DIN | Published On : 03rd April 2022 05:43 AM | Last Updated : 03rd April 2022 05:43 AM | அ+அ அ- |

தெலங்கானா ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற உகாதி கொண்டாட்டத்தில் பங்கேற்ற புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள்.
தெலங்கானா ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற உகாதி கொண்டாட்டத்தில், புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனா்.
தெலங்கானா ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற உகாதி கொண்டாட்டத்தில் புதுவை மாநில மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என தெலங்கானா மாநில ஆளுநரும், புதுவை மாநில துணை நிலை(பொ) ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு விடுத்திருந்தாா்.
இதன்படி, புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், எஸ்.சந்திர பிரியங்கா, சட்டப் பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏ.ஜான்குமாா், ஏ.கே.டி.ஆறுமுகம், பி.அசோக்பாபு, வி.பி.ராமலிங்கம், அங்காளன், சிவசங்கரன், தட்சிணாமூா்த்தி, உ.லட்சுமிகாந்தன், வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.