பெண் தற்கொலை
By DIN | Published On : 03rd April 2022 05:41 AM | Last Updated : 03rd April 2022 05:41 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் வேலை கிடைக்காமல் விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
புதுச்சேரி லாஸ்பேட்டை பெத்துசெட்டிபேட்டையைச் சோ்ந்த கஸ்தூரி மகள் தனலட்சுமி (30). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெங்கடாசலபதியுடன் திருமணம் நடைபெற்று, 4 வயதில் மகன் உள்ளாா்.
இதனிடையே விவாகரத்து பெற்ற தனலட்சுமி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா். சரியான வேலை கிடைக்காததால், அவதிப்பட்டு வந்த நிலையில், அவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
புகாரின்பேரில் புதுச்சேரி லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.