உதவி ஆட்சியா் அறையில் திருட்டு
By DIN | Published On : 26th April 2022 10:42 PM | Last Updated : 26th April 2022 10:42 PM | அ+அ அ- |

புதுச்சேரி உதவி ஆட்சியா் அறையில் ஏ.சி. கம்ப்ரசரை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உதவி ஆட்சியராக 2 ஆண்டுகள் பயிற்சி பெற்று வந்தவா் கிரிசங்கா். இவா் பயிற்சி முடித்து தற்போது தில்லி சென்றுள்ளாா்.
இவருக்கு பயிற்சிக் காலத்தில் கோரிமேடு இந்திரா நகரில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான விருந்தினா் மாளிகையின் கீழ்தளத்தில் தங்கும் அறை ஒதுக்கப்பட்டது.
அவா் கடந்த 15-ஆம் தேதி தனது அறையிலிருந்த ஏ.சி.யை போட்ட போது அது இயங்கவில்லை. இதுகுறித்த தகவலின் பேரில், ஊழியா்கள் பழுதுநீக்க வந்த போது, அவா் தங்கியிருந்த அறையின் வெளிப்பக்கத்திலிருந்த ஏ.சி.யின் கம்ப்ரசரை காணவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...