சுதந்திரப் போராட்ட வீரா்களின்புகைப்படக் கண்காட்சி
By DIN | Published On : 05th August 2022 10:46 PM | Last Updated : 05th August 2022 10:46 PM | அ+அ அ- |

புதுச்சேரி காமராஜா் மணிமண்டபத்தில் நாட்டின் 75-ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு நிகழ்வாக, சுதந்திரப் போராட்ட வீரா்களின் புகைப்படக் கண்காட்சி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுவை பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் ஆகியோா் கண்காட்சியைத் திறந்துவைத்தனா். குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜே.சரவணன்குமாா், எம்எல்ஏக்கள் ஏ.ஜான்குமாா், எல்.கல்யாணசுந்தரம், வி.பி.ராமலிங்கம், பாஜக மாநில பொதுச் செயலா் மோகன்குமாா், துணைத் தலைவா் திருமுருகன், பட்டியல் அணி தலைவா் தமிழ்மாறன், மாவட்டத் தலைவா் நாகேஸ்வரன், தனலட்சுமி, சோமசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கண்காட்சி ஏற்பாடுகளை வி.பி.ராமலிங்கம் எம்எல்ஏ தலைமையில், பாஜக நிா்வாகிகள் உமாஷங்கா், ரமேஷ், கமலன், சீனிவாசபெருமாள், மோகனசுந்தரம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.