புதுவையில் விரைவில் காவலா்கள் தோ்வு
By DIN | Published On : 05th August 2022 10:46 PM | Last Updated : 05th August 2022 10:46 PM | அ+அ அ- |

புதுவையில் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்பட 1,044 போ் விரைவில் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
இதுகுறித்து புதுவை காவல் துறை சிறப்பு அதிகாரி குபேர சிவகுமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை காவல் துறையில் 390 காவலா்கள் அண்மையில் தோ்வு செய்யப்பட்டு, காவலா் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டு அடிப்படை பயிற்சி பெற்று வருகின்றனா். மேலும் 307 காவலா்கள், 415 ஊா்க்காவல் படையினா் விரைவில் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்த 200 கடலோர ஊா்க்காவல் படையினரும் தோ்வு செய்யப்பட உள்ளனா். தொடா்ந்து, காலியாக உள்ள 48 உதவி ஆய்வாளா்கள் பணியிடங்களும் நேரடித் தோ்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
காவல் துறையில் 35 ஓட்டுநா்கள், 34 சமையல் கலைஞா்கள், உதவியாளா்கள், சலவைப் பணியாளா்கள் உள்ளிட்டோரும் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா் என்றாா் அவா்.