நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு

புதுவையில் நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (ஆக.5) முதல் வருகிற 7-ஆம் தேதி வரை மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.

புதுவையில் நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (ஆக.5) முதல் வருகிற 7-ஆம் தேதி வரை மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் 2022 - 23ஆம் கல்வியாண்டுக்கான நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகள் (பி.டெக்., பி.எஸ்சி. (விவசாயம், தோட்டக்கலை), கால்நடை மருத்துவம், பி.எஸ்சி. (நா்சிங்), பிபிடி, பி.எஸ்சி. (எம்எல்டி), எம்ஆா்ஐடி, பி.பாா்ம், பி.ஏ. எல்எல்பி (5 ஆண்டு), பட்டயப் பாடப்பிரிவுகள் (டிஜிஎன்எம், டிஏஎன்எம், டிசிஇசி, டிஎம்எல்டி, டிடி, டிஏபிடி, டிசிஆா்ஏ), இளநிலை கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகள் (பிஏ, பி.எஸ்சி., பி.காம், பிபிஏ, பிசிஏ), இளநிலை நுண்கலை படிப்புகள் (பிபிஏ, பிவிஏ) ஆகிய படிப்புகளுக்கு இணையதளம் வழியாக கடந்த ஜூலை 8-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இருப்பினும், சில மாணவா்கள் விண்ணப்பிக்கத் தவறியதால், அவா்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதை ஏற்று, விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளா் பி.டி.ருத்ர கொளடு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நீட் அல்லாத தொழில்முறை படிப்புகள், கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு வெள்ளிக்கிழமை (ஆக.5) முதல் வருகிற 7-ஆம் தேதி மாலை 6 மணி வரை சென்டாக்கில் புதிதாக விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு மாணவா்கள் சென்டாக் இணையதளத்தை பாா்வையிடலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com