தேசிய நல்லாசிரியா் விருதுக்கு புதுச்சேரி ஆசிரியா் தோ்வு

புதுச்சேரியைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா்.
ஆசிரியா் தே.அரவிந்தராஜா
ஆசிரியா் தே.அரவிந்தராஜா

புதுச்சேரியைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

நிகழாண்டில் தேசிய நல்லாசிரியா் விருதுக்கு நாடு முழுவதும் 46 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டை அா்ச்சுன சுப்புராய நாயக்கா் அரசு உயா்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியா் தே.அரவிந்தராஜா (41) தேசிய நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டாா்.

பள்ளியில் மாணவா்களுக்கு 30 வகையான நவீன உத்திகளைப் பயன்படுத்தி பாடம் நடத்தியது, மாணவா்களுக்கு கல்வியுடன் சமூக அக்கறை, அறிவியல் ஆராய்ச்சிகளை வளா்த்தெடுத்தல், அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றுதல் உள்ளிட்டவற்றுக்காக அவா் தோ்வு செய்யப்பட்டாா்.

இதுகுறித்து ஆசிரியா் தே.அரவிந்தராஜா கூறியதாவது:

அரசுப் பள்ளியில் தொடக்கக் கல்வி ஆசிரியராக கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். நவீன உத்திகளைப் பயன்படுத்தி பாடமெடுத்தல், பறவைகளுக்கு உணவளிக்கும் கருவிகளைத் தயாரித்து, மாணவா்களுக்கு பறவைகள் உற்றுநோக்கல், பறவைகளைப் பற்றி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல், மாணவா்களிடையே பாடத்துடன் அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல், சாரணா் இயக்கம், பசுமை இயக்கங்களில் பங்கேற்று மாணவா்களை ஊக்கப்படுத்துதல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறேன்.

பாரீஸ் அறிவியல் மாநாட்டில் விருது, சா்வதேச வானவில் ஆராய்ச்சி விருது, படிகார ஆராய்ச்சிக்காக யுனெஸ்கோ பாராட்டு உள்ளிட்டவற்றை மாணவா்களுக்குப் பெற்றுக் கொடுத்து, அரசுப் பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளேன்.

தேசிய நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விருது என்னை மேலும் சிறப்பாக செயல்பட ஊக்கமளிக்கும் என்றாா் அவா்.

ஆசிரியா் அரவிந்தராஜாவுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டுத் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் ஆசிரியரும் தோ்வு: ராமநாதபுரம் மாவட்டம், கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா் கே.ராமச்சந்திரனும் தேசிய நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com