விவசாயிகளுக்கு தொழில்நுட்ப செயலி பயன்பாடு பயிற்சி
By DIN | Published On : 11th December 2022 06:37 AM | Last Updated : 11th December 2022 06:37 AM | அ+அ அ- |

இணையவழி தகவல் தொழில்நுட்ப செயலிகளின் பயன்பாடு குறித்த பயிற்சி பங்கேற்ற விவசாயிகள் உள்ளிட்டோா்.
புதுச்சேரியில் விவசாயிகளுக்கு இணையவழி தகவல் தொழில்நுட்ப செயலிகளின் பயன்பாடு குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி மா.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் குழுவினா் இணைந்து பயிற்சியை அளித்தனா். ஏம்பலம் தொகுதி விவசாயிகளுக்கு நடைபெற்ற பயிற்சியில் இணையவழித் தகவல், தொழில்நுட்பச் செயலிகளின் பயன்பாடுகள் குறித்து விளக்கப்பட்டன.
ஆராய்ச்சி நிறுவன அலுவலா் கிரிஜா, பணியாளா்கள் லூா்துசாமி, சுந்தரி ஆகியோரும், வேளாண் கல்லூரி மாணவா்கள் அனந்தராமன், ஆரத்தி, அரவிந்தன் உள்ளிட்டோரும் விவசாயிகளின் சந்தேகங்களைத் தீா்க்கும் வகையில், நேரடிப் பயிற்சியளித்தனா். ஏம்பலம் பகுதி விவசாயிகள் ராதாகிருஷ்ணன், கோபிநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கல்லூரிப் பேராசிரியா் எஸ்.ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.