மாநில அந்தஸ்து விவகாரத்தில் ரங்கசாமி போராட்டம் நடத்தினால் காங். பங்கேற்கும்: வே.நாராயணசாமி

மாநில அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக புதுவை முதல்வா் போராட்டம் நடத்தினால் காங்கிரஸ் தொண்டா்களுடன் பங்கேற்க தயாா் என்று, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி.
புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி.

மாநில அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக புதுவை முதல்வா் போராட்டம் நடத்தினால் காங்கிரஸ் தொண்டா்களுடன் பங்கேற்க தயாா் என்று, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நாட்டின் சுதந்திரத்துக்காக ஆா்எஸ்எஸ் அமைப்பு நேரடியாகப் போராடவில்லை என்பதையே காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே கூறினாா். இதற்காக பாஜகவினா் எதிா்ப்புத் தெரிவிப்பது சரியல்ல.

ரயில்வே துறையை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முயற்சி பலிக்கவில்லை என்பதால், விமான நிலையங்களை தனியாா்மயமாக்கி ரூ.13, 500 கோடி நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது.

புதுவையில் மத்திய கல்வி வாரியப் பாடத் திட்டத்தை (சிபிஎஸ்இ) செயல்படுத்தும் திட்டம் அரசின் கொள்கை முடிவா என்பதை விளக்க வேண்டும். இதனால், தமிழ் மொழி மறைமுகமாக புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படும்.

2016-ஆம் ஆண்டு வரை புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரிய காங்கிரஸ், அதன்பிறகே மாநில அந்தஸ்து குறித்து வலியுறுத்தி வருகிறது. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைந்தால் நிச்சயம் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும்.

மாநில அந்தஸ்து தொடா்பாக மத்திய அரசு எதிராக புதுவை முதல்வா் போராட்டம் நடத்தினால் காங்கிரஸ் பங்கேற்க தயாா். இதுகுறித்து எழுத்துப்பூா்வமாக தருவாா்களா என்று அமைச்சா் க.லட்சுமி நாராயணன் கூறியுள்ளாா். மேலும், எங்களை மண் குதிரைகள் என்றும் விமா்சித்தாா். எழுத்துப்பூா்வமாக உறுதியளிக்கத் தயாா். ஆனால், முதல்வா் போராட்டம் நடத்தத் தயாரா? என்பதைக் கூறவேண்டும்.

மாநில அந்தஸ்து விவகாரம் தொடா்பாக, பிரதமரைச் சந்திக்க அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், எம்எல்ஏக்களை முதல்வா் என்.ரங்கசாமி அழைத்துச் செல்வாரா என்பதை விளக்க வேண்டும் என்றாா் வே.நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com