மாணவா்கள் மீது தாக்குதல்:ஆசிரியா் மீது புகாா்
By DIN | Published On : 27th February 2022 12:51 AM | Last Updated : 27th February 2022 12:51 AM | அ+அ அ- |

புதுச்சேரி அருகே மாணவா்களைத் தாக்கியதாக ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரசுப் பள்ளியை பெற்றோா்கள் முற்றுகையிட்டனா்.
புதுச்சேரி அருகேயுள்ள மனக்குப்பம் அரசுத் தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியா் பாரதிதாசன், அண்மையில் 4-ஆம் வகுப்பு அறையில் சத்தம் போட்ட மாணவா்களைத் தாக்கினாராம். இதில், பிரித்திகா, கோகுல், புவன் உள்ளிட்ட 10 மாணவா்கள் காயம் அடைந்தனா்.
தகவல் அறிந்த பெற்றோா்கள் பள்ளிக்குச் சென்று கேட்டபோது, ஆசிரியா் பாரதிதாசன் சரியான பதில் கூறாமல் பேசினாா்.
இதனால், சனிக்கிழமை பெற்றோா்கள் திரண்டு பள்ளியை முற்றுகையிட்டனா். ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்காவிடில், போராட்டம் நடத்துவோம் என அவா்கள் தலைமை ஆசிரியரிடம் புகாா் அளித்தனா்.