புதுச்சேரி தேசிய இளைஞர் விழாவை ரத்து செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

புதுச்சேரி மக்களை கரோனா பேரிடரில் இருந்து காப்பாற்ற தேசிய இளைஞர் விழாவை ரத்து செய்ய வேண்டும், பிரதமர் வருகையும் தவிர்க்க வேண்டும் என்று, புதுவை மா
புதுச்சேரி தேசிய இளைஞர் விழாவை ரத்து செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்
புதுச்சேரி தேசிய இளைஞர் விழாவை ரத்து செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

புதுச்சேரி மக்களை கரோனா பேரிடரில் இருந்து காப்பாற்ற தேசிய இளைஞர் விழாவை ரத்து செய்ய வேண்டும், பிரதமர் மோடி வருகையும் தவிர்க்க வேண்டும் என்று, புதுவை மாநில இந்திய கம்யூ மாநில செயலாளர் அ.மு.சலீம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி கட்சித் தலைமை அலுவலகத்தில், வியாழக்கிழமை அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் கரோனா, ஒமைக்கிறான் தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. ஆளுநர் மாளிகை, நீதிமன்றம் ஆகியவற்றில் கரோனா சமூக இடைவெளி என கூறி மக்களுக்கு அனுமதி இல்லை.

ஆனால், 7500 இளைஞர்கள் பங்கேற்கும் தேசிய இளைஞர் தின விழா தேவையா..?.
புதுவையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 மடங்காக உயரும் நிலையில், தேசிய இளைஞர் தின விழாவை துவக்கி வைக்க பிரதமர் மோடி வருகிறார். 

புதுச்சேரி மக்களின் உயிரில் பாஜக விளையாடுகிறது. முதல்வர் ரங்கசாமியும் வாய்மூடி மௌனியாகி விட்டார். பிரதமர் புதுவைக்கு வருவதை நாங்கள் எதிர்க்கவில்லை. கரோனா பேரிடர் நேரத்தில் வர வேண்டாம் என்கிறோம்.
ஒமைக்ரான் மூலம் மிக பெரிய ஆபத்தை பாஜக கொண்டு வர இருக்கிறது.

நோய் தொற்றில் இருந்து புதுச்சேரி மக்களை காப்பாற்ற, தேசிய இளைஞர் விழாவை  நடத்த வேண்டாம். பிரதமர் வர வேண்டாம்.
புதுச்சேரி மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம். 
இதற்காக DONT COME MODIJI என்ற கோஷத்தை முன் வைத்தும்
10-ம் தேதி, பிரதமர் வர வேண்டாம் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பிரதமருக்கு இமெயில், கடிதம் அனுப்பப்படும் என்றார். உடன் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதன், ஏஐடியூசி பொதுச் செயலாளர் சேதுசெல்வம் உள்ளிட்டோர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com