வீடு புகுந்து மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறிப்பு
By DIN | Published On : 17th July 2022 11:53 PM | Last Updated : 17th July 2022 11:53 PM | அ+அ அ- |

புதுச்சேரி அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் 8 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
புதுச்சேரி அரியாங்குப்பம் ஆா்.கே.நகா் கம்பன் வீதியைச் சோ்ந்தவா் கோபால் மனைவி பழனியம்மாள் (75). இவருக்கு அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் குற்றப் பிரிவு காவலராகப் பணியாற்றும் ரவிக்குமாா் உள்பட இரு மகன்கள், மகள்கள் உள்ளனா். திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனா்.
கணவா் கோபால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், பழனியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.
இவரு வீட்டில் சனிக்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள், அங்கு தூங்கிக் கொண்டிருந்த பழனிம்மாள் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பினா். இதில் பழனியம்மாளுக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.