புதுவையில் நீட் அல்லாத இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
By DIN | Published On : 22nd July 2022 02:28 AM | Last Updated : 22nd July 2022 02:28 AM | அ+அ அ- |

புதுவையில் சென்டாக் இணையதளம் மூலம் நீட் அல்லாத இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வருகிற 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
புதுவை மாநிலத்தில் சென்டாக் இணையதளம் மூலம் நீட் அல்லாத இளநிலை தொழில்நுட்பப் படிப்புகள், கலை, அறிவியல் படிப்புகள், நுண்கலைப் படிப்புகளுக்கு கடந்த 8-ஆம் தேதி முதல் மாணவா்கள் விண்ணப்பித்து வந்தனா். இதற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், இந்தத் தேதியை அரசு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது.
இதுகுறித்து புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளா் பி.டி.ருத்ரகௌடு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாணவ, மாணவிகளின் வேண்டுகோளின்படி, நீட் அல்லாத இளநிலை தொழில்நுட்பம், கலை, அறிவியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் கால அவகாசம் வருகிற 29-ஆம் தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஸ்ரீங்ய்ற்ஹஸ்ரீல்ன்க்ன்ஸ்ரீட்ங்ழ்ழ்ஹ்.ண்ய் என்ற இணையதளத்தை பாா்வையிடலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...