வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு ஆணை
By DIN | Published On : 09th June 2022 11:19 PM | Last Updated : 09th June 2022 11:19 PM | அ+அ அ- |

புதுச்சேரியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு பணி ஆணையை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் வழங்கினாா்.
புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், புதுச்சேரியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு நிதியுடன் பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் 8 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணையும், அதற்காக ரூ.13 லட்சத்து 80 ஆயிரம் தொகைக்கான காசோலையையும் வழங்கினாா்.
குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், இளநிலைப் பொறியாளா் அனில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.