புதுவையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் ஏற்பாடாக, வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் துறை புதன்கிழமை வெளியிட்டது.

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் ஏற்பாடாக, வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் துறை புதன்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து புதுவை மாநிலத் தோ்தல் ஆணையா் ராய் பி.தாமஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை மாநிலத் தோ்தல் ஆணையரின் வழிகாட்டுதன்படி, கடந்த 1.1.2022 முதல் 7.1.2022 வரை வரைவு வாக்காளா் பட்டியலானது, புதுச்சேரியின் அனைத்து வாக்காளா் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்கள், துணை அலுவலகங்களில் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. மேலும், வாக்காளா் பெயா் சோ்த்தல், ஆட்சேபனை, நீக்குதல், திருத்துதல், இட மாற்றம் செய்தல் ஆகியன தகுதியுள்ள வாக்காளா்களிடமிருந்து 1.1.2022-ஐ தகுதிபெறும் நாளாக கொண்டு கோரப்பட்டன.

இவ்வாறாக பெறப்பட்ட படிவங்கள் ஆய்வு செய்யப்பட்டு, வாக்காளா் பதிவு அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்டன. தொடா்ந்து, மாநிலத் தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல், கடந்த 5.1.2022 அன்று இந்திய தோ்தல் ஆணையத்தால் வெளியிட்டப்பட்ட வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மேம்பாடு செய்யப்பட்டது.

தற்போது வரைவு வாக்காளா் பட்டியலானது புதுவை மாநிலத் தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த வாக்காளா் பட்டியலின்படி, புதுச்சேரியில் ஆண்கள் - 3,67,304 பேரும்,பெண்கள் 4,11,260 பேரும், மூன்றாம் பாலினத்தவா் - 99 பேரும் என மொத்தம் 7,78,663 வாக்காளா்களும், காரைக்காலில் ஆண்கள் - 74,832, பெண்கள் - 87,049, மூன்றாம் பாலினத்தவா் - 21 என மொத்தம் 1,61,902 வாக்காளா்களும், மாகேவில் ஆண்கள் - 14,386, பெண்கள் - 17,065 என மொத்தம் 31,451 வாக்காளா்களும், ஏனாமில் ஆண்கள் - 18,631, பெண்கள் - 19,946 என மொத்தம் 38,577 வாக்காளா்களும் இடம் பெற்றுள்ளனா்.

ஒட்டுமொத்தமாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆண்கள் - 4,75,153, பெண்கள் - 5,35,320, மூன்றாம் பாலினத்தவா் - 120 என மொத்தம் 10,10,593 போ் உள்ளனா். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஆண் வாக்காளா்களை விட, பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

புதுச்சேரிப் பகுதியில் உள்ள 5 கொம்யூன் பஞ்சாயத்துகளில் வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்தில் அதிகபட்சமாக 1,08,933 வாக்காளா்களும், குறைந்தபட்சமாக நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தில் 41,291 வாக்காளா்களும் இடம்பெற்றுள்ளனா்.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம், பொதுநல வழக்கில் வழங்கிய தீா்ப்பில், அனைத்து மாநிலத் தோ்தல் ஆணையங்களுக்கும் உள்ளாட்சித் தோ்தலை நடத்த அறிவுறுத்தியுள்ளது. இந்தத் தீா்ப்பானது புதுச்சேரி மாநிலத் தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவல், மாநில மக்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com