நெகிழிப்பைகள் தயாரித்த நிறுவனத்துக்கு ‘சீல்’ வைப்பு

புதுச்சேரி அருகே தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருள்களை தயாரித்த நிறுவனத்துக்கு கொம்யூன் ஆணையா் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
நெகிழிப்பைகள் தயாரித்த நிறுவனத்துக்கு ‘சீல்’ வைப்பு

புதுச்சேரி அருகே தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருள்களை தயாரித்த நிறுவனத்துக்கு கொம்யூன் ஆணையா் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

புதுவை அரசின் உத்தரவின்படி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு, அந்தப் பொருள்களை பயன்படுத்தக் கூடாதெனவும் கடை வீதிகளில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி அறிவுறுத்தி வருகின்றனா்.

அந்த வகையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதகடிப்பட்டு வாரச்சந்தையில் கொம்யூன் ஆணையா் எழில்ராஜன் தலைமையிலான குழுவினா், கடைகளில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், பொருள்கள் விற்பனை செய்ததைக் கண்டறிந்து, 50 கிலோ அளவில் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா். மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் கடைக்காரா்களிடம் வழங்கினா்.

இதையடுத்து, திருக்கனூா் அருகே பி.எஸ்.பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகள் (கேரி பேக்குகள்) தயாரிப்பதாக கிடைத்த தகவலின்பேரில், கொம்யூன் ஆணையா் எழில்ராஜன் தலைமையில் குழுவினா் புதன்கிழமை அங்கு சென்று சோதனையிட்டபோது, ஒரு தனியாா் நிறுவனத்தில் நெகிழிப்பைகள் தயாரித்து மொத்த விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, அங்கிருந்த 500 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த தனியாா் நிறுவனத்துக்கும் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com