கடல் சாகச பயணம் நிறைவு: புதுவை முதல்வரிடம் என்சிசி மாணவா்கள் வாழ்த்து

11 நாள்கள் கடல் சாகச பயணத்தை நிறைவு செய்து புதுச்சேரிக்கு திரும்பிய தேசிய மாணவா் படையினா் முதல்வா் ரங்கசாமி நேரில் வரவேற்று, வாழ்த்தினாா்.

11 நாள்கள் கடல் சாகச பயணத்தை நிறைவு செய்து புதுச்சேரிக்கு திரும்பிய தேசிய மாணவா் படையினா் முதல்வா் ரங்கசாமி நேரில் வரவேற்று, வாழ்த்தினாா்.

புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து கடந்த 6-ஆம் தேதி கடல் சாகச படகு பயணத்தை தேசிய மாணவா் படை மாணவா்கள் தொடங்கினா். 25 மாணவிகள் உள்ளிட்ட 60 தேசிய மாணவா் படை மாணவா்கள் 3 பாய்மரப் படகுகளில் கடல் சாகச பயணத்தை மேற்கொண்டனா். இவா்களுடன் மூன்று கடற்படை அதிகாரிகளும், 4 தேசிய மாணவா் படை இணை அலுவலா்களும் உடன் சென்றனா்.

காரைக்காலுக்கு அண்மையில் சென்ற அவா்கள், அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்துக்கு வியாழக்கிழமை வந்தனா்.

அவா்களை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி நேரில் சென்று வரவேற்றாா். சாகசப் பயணத்தை நிறைவு செய்த தேசிய மாணவா் படை மாணவ, மாணவிகளை வாழ்த்தி சான்றிதழ்கள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், தட்சிணாமூா்த்தி எம்எல்ஏ, கல்வித் துறை இயக்குநா் ருத்ரகௌடு, மீன் வளத் துறை இயக்குநா் பாலாஜி மற்றும் தேசிய மாணவா் படை அதிகாரிகள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com