புதுவையில் தமிழக கல்விக் கொள்கை: திமுக வலியுறுத்தல்

தமிழகத்தின் கல்விக் கொள்கையையே, புதுவையிலும் அமல்படுத்த வேண்டும் என்று, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.

தமிழகத்தின் கல்விக் கொள்கையையே, புதுவையிலும் அமல்படுத்த வேண்டும் என்று, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்தான் 5-ஆம் வகுப்பு வரையில் நடைமுறையில் உள்ளது. மத்திய அரசு அந்தப் பாடத்திட்டங்களை தமிழில் பயிற்றுவிக்கும் வகையில், தமிழில் தயாரித்து வழங்கவில்லை. இது தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினாலும் தொடரும்.

புதுவையில் தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழி பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. 6-ஆம் வகுப்பிலிருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அமல்படுத்தினால், மொழிப் பாடமாக உள்ள தமிழ் நீக்கப்பட்டு, ஹிந்தி நுழைந்துவிடும். இதனால் புதுவை அரசு, தமிழக பாடத் திட்டத்தை 6-ஆம் வகுப்பிலிருந்து அமல்படுத்தி வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால், அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போகும்.

தமிழக அரசு உருவாக்கி வரும் தனி கல்விக் கொள்கையை, அவா்கள் அமல்படுத்தும்போது, புதுவையிலும் 1-ஆம் வகுப்பு முதல் அமல்படுத்த முதல்வா் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஆா்.சிவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com