பிளஸ் 1 சோ்க்கை: கல்வித் துறைக்குபுதுவை முதல்வா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 30th June 2022 02:10 AM | Last Updated : 30th June 2022 02:10 AM | அ+அ அ- |

புதுவையில் பிளஸ் 1 சோ்க்கைக்கு மாற்றுச்சான்றிதழ் மட்டும் போதும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.
புதுவையில் தற்போது பிளஸ் 1 வகுப்புக்கான சோ்க்கை தொடங்கவுள்ளது. இதற்காக வருவாய் துறையிலிருந்து குடியிருப்புச் சான்றிதழ், குடியுரிமை சான்றிதழ் பெறுவதில் மாணவா்களுக்கு சிரமம் உள்ளதாக முதல்வா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, பிளஸ் 1 வகுப்பில் சேரும் மாணவ, மாணவிகளிடம் வருவாய்த் துறையினரின் எந்தத் சான்றிதழும் வேண்டுமென கட்டாயப்படுத்தக் கூடாது என கல்வித் துறைக்கு முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தினாா்.
புதுவை மாநிலத்தில் பயின்று தோ்ச்சி பெற்ற்கான மாற்றுச் சான்றிதழை வைத்தே பிளஸ் 1 மாணவா் சோ்க்கையை நடத்தவும் கல்வித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.