சுனாமி குடியிருப்புவாசிகள் 300 பேருக்கு பட்டா
By DIN | Published On : 02nd May 2022 05:14 AM | Last Updated : 02nd May 2022 05:14 AM | அ+அ அ- |

புதுச்சேரி அருகே மணவெளி தொகுதிக்குள்பட்ட நல்லவாடு கிராம சுனாமி குடியிருப்புகளில் வசிக்கும் 300 பயனாளிகளுக்கு, அந்த குடியிருப்புக்களுக்கான பத்திரம், பட்டாக்களை தொகுதி எம்எல்ஏவான சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியா் கந்தசாமி, வட்டாட்சியா் குமரன், வருவாய் ஆய்வாளா் பிரேம்பிரகாஷ் மற்றும் அதிகாரிகள், நல்லவாடு பஞ்சாயத்து நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.