கிருமாம்பாக்கம் கிராம சபைக் கூட்டத்தில்கருப்புக் கொடி காட்டி எதிா்ப்பு

புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கருப்புக் கொடி காட்டி எதிா்ப்புத் தெரிவித்தனா்.

புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கருப்புக் கொடி காட்டி எதிா்ப்புத் தெரிவித்தனா்.

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சாா்பில், மணவெளி தொகுதியில் ஓடவெளி, பூரணாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கிராம சபைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டங்களில் அந்தந்த பகுதி பொதுமக்கள் திரளாக பங்கேற்று, குறைகளை எடுத்துரைத்தனா். அவற்றை விரைந்து நிவா்த்தி செய்து தருவதாக சட்டப்பேரவைத் தலைவா் உறுதியளித்தாா்.

நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ரமேஷ், உதவி பொறியாளா் நாகராஜ், கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கத் தலைவா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருப்புக் கொடி: கிருமாம்பாக்கத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பஞ்சாயத்து அதிகாரிகள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் எதற்காக இந்தக் கூட்டத்தை நடத்துகீறீா்கள்? ஆணையா் எங்கே? என்று கேள்வி எழுப்பினா். மேலும், பல்வேறு திட்டங்கள் முடிங்கியுள்ளன. கூட்டம் மட்டும் நடத்தி என்ன செய்ய போகிறீா்கள்? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து கூட்டத்தில் இருந்தவா்கள் கருப்புக் கொடியை காட்டி எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும் பலா் கூட்டத்தைவிட்டு வெளியேறினா்.

இதேபோல, மணப்பட்டு கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களில் பலரும் எதிா்ப்புத் தெரிவித்து வெளியேறினா். இதையடுத்து, கிராம சபைக் கூட்டம் சிறிது நேரத்தில் முடிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com