குழந்தைகளுக்கான அடிப்படை தேவைகளை உறுதிப்படுத்த வேண்டும்துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி கடற்கரை சாலையில் உலகக் குழந்தைகள் துஷ்பிரயோக தடுப்பு தினத்தையொட்டி நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரா
புதுச்சேரி கடற்கரை சாலையில் உலக குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தராஜன்
புதுச்சேரி கடற்கரை சாலையில் உலக குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தராஜன்

புதுச்சேரி கடற்கரை சாலையில் உலகக் குழந்தைகள் துஷ்பிரயோக தடுப்பு தினத்தையொட்டி நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தராஜன்.

புதுச்சேரி, நவ. 20: குழந்தைகளுக்கான அடிப்படைத் தேவைகளை உறுதிப்படுத்துவது அவசியம் என்று புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசைசௌந்தரராஜன் கூறினாா்.

உலகக் குழந்தைகள் துஷ்பிரயோக தடுப்பு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமம் மற்றும் பி.எம்.எஸ்.எஸ்.எஸ். அமைப்பின் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

பேரணியைத் தொடங்கி வைத்து துணைநிலை ஆளுநா் தமிழிசைசௌந்தரராஜன் பேசியதாவது: உலக அளவில் 60 சதவிகித குழந்தைகள் ரத்த சோகையால் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது உலக சுகாதார மையத்தால் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, குழந்தைகளுக்கான உணவு, கல்வி ஆகிய அடிப்படை தேவைகளை உறுதிப்படுத்துவது அவசியம்.

மாணவா்களின் மதிய உணவானது சத்தானதாக இல்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆகவே தான் மத்திய அரசு நடப்பு ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. சிறுதானியங்களில் நமக்கான அனைத்து சத்துகளும் உள்ளன.

பாரதப் பிரதமரின் சீரிய நடவடிக்கையாக கழிப்பறைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, தற்போது நாட்டில் கழிப்பறை இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துள்ளன.

காசியில் தொடங்கிய காசி-தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சியில் புதுவையில் இருந்தும் ஏராளமான தமிழறிஞா்கள் பங்கேற்றுள்ளனா். காசிக்கும், தமிழகத்துக்கும் உள்ள கலாசாரப் பிணைப்பை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துவதாக அமையும்.

குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்ததாக பதியப்படும் வழக்குகளில் சம்பந்தப்பட்டோா் தப்பி விடாத வகையில் சம்பந்தப்பட்ட துறையினா் செயல்படவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் புதுவை சுகாதார நலத்துறைச் செயலா் உதயகுமாா், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநா் முத்துமீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com