பொதுப் பணித் துறை தினக்கூலி ஊழியா்கள் போராட்டம்
By DIN | Published On : 13th October 2022 12:54 AM | Last Updated : 13th October 2022 12:54 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் பொதுப் பணித் துறை அலுவலகத்தை தினக்கூலி ஊழியா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை பொதுப் பணித் துறையில் பகுதிநேர தினக்கூலி ஊழியா்களாக பணியாற்றும் 1311 போ், பணிமூப்பு அடிப்படையில் முழுநேர தினக்கூலி ஊழியா்களாக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
ரூ.752 வீதம் 30 நாள்களுக்கு ஊதியம் கருவூலம் வழியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமை அலுவலகத்தை தினக்கூலி ஊழியா்கள் சங்கத் தலைவா் சரவணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் புதன்கிழமை முற்றுகையிட்டனா். மேலும், அலுவலகக் கதவுகளையும் அவா்கள் மூடினா்.
பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி தினக்கூலி ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அவா்களது கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. பின்னா், போராட்டம் கைவிடப்பட்டது.