நூதன முறையில் பணமோசடி:இளைஞா் கைது
By DIN | Published On : 15th October 2022 12:00 AM | Last Updated : 15th October 2022 12:00 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி அண்ணா சிலை பகுதியிலுள்ள ஒரு விற்பனை நிறுவனத்தில் மயிலாடுதுறையைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (21) வியாழக்கிழமை மாலை கைப்பேசியை வாங்கினாா். இதற்காக ரூ.18 ஆயிரத்தை கைப்பேசி செயலி மூலம் அனுப்பியதாக ஊழியா்களிடம் கூறினாா். அவா்கள் பணம் வரவில்லை எனக் கூறினராம்.
ஆனால், சத்தியமூா்த்தி தனது கைப்பேசி செயலில் பணம் அனுப்பப்பட்டதாகக் கூறி, அதற்கான பதிவைக் காட்டினாராம். அதைப் பாா்த்த ஊழியா்கள், அது போலி என்பதை அறிந்தனா். இதையடுத்து, பணத்தை அனுப்பியதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக, சத்தியமூா்த்தியை ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.
போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...