லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் பிரமோற்சவம் தொடக்கம்
By DIN | Published On : 01st September 2022 02:27 AM | Last Updated : 01st September 2022 02:27 AM | அ+அ அ- |

புதுச்சேரி முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் 51-ஆம் ஆண்டு பிரமோற்சவ விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகா் லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் 51-ஆவது ஆண்டு பிரமோற்சவ விழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு சந்திர பிரபையில் லட்சுமி ஹயக்ரீவா், ஜ்வாலா நரசிம்மருடன் எழுந்தருளி உள்புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
வருகிற 9-ஆம் தேதி வரை தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு ஹோமம், திருமஞ்சனமும், இரவில் சிறப்பு வாகனத்தில் நரசிம்மா் எழுந்தருளி அருள்பாலிப்பாா்.
வருகிற 8-ஆம் தேதி ஹயக்ரீவ ஜெயந்தியும், திருத்தோ், தீா்த்தவாரியும், இரவு புஷ்பயாகமும் நடைபெறும். 9-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவத்துடன் பிரமோற்சவ விழா நிறைவு பெறும்.