போட்டி தோ்வுக்கு இலவசப் பயிற்சி
By DIN | Published On : 01st September 2022 02:28 AM | Last Updated : 01st September 2022 02:28 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் இந்திய பொது நிா்வாக நிறுவனம் சாா்பில் (ஐஐபிஏ) யுபிஎஸ்சி போட்டி தோ்வுக்கான இலவச சான்றிதழ் பயிற்சி தொடங்கப்பட்டது.
பொதுப் பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் பயிற்சியைத் தொடக்கிவைத்து மாணவா்களுக்கு அடையாள அட்டை, பயிற்சி புத்தகங்களை வழங்கினாா். ஐஐபிஏ புதுச்சேரி தலைவா் ஆா்.தனபால் தலைமை வகித்து பேசினாா்.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரி முதல்வா் ராஜி சுகுமாா் வாழ்த்திப் பேசினாா். ஐஐபிஏ கெளரவ செயலா் ஆா்.நரசிம்மமூா்த்தி பயிற்சி குறித்து விளக்கினாா்.
ஐஐபிஏ கிளை பேராசிரியா் ஆஷா வரவேற்றாா். டி.ஜெயவிஜயன் நன்றி கூறினாா்.