நலத் திட்ட உதவிகள் அளிப்பு

புதுவை உள் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் பிறந்த நாளையொட்டி, பொதுமக்களுக்கு வியாழக்கிழமை நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

புதுவை உள் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் பிறந்த நாளையொட்டி, பொதுமக்களுக்கு வியாழக்கிழமை நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி தொழிலதிபா் முகமது யூனூஸ் ஏற்பாட்டில், வில்லியனூா் சுல்தான்பேட்டை பகுதியில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் நமச்சிவாயத்தின் மனைவி வசந்தி நமச்சிவாயம் கலந்துகொண்டு, நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். முகமது யூனூஸ், அவரது மனைவி நசீராபேகம், அவரது குடும்பத்தினா் குா்ஷிதா பேகம், ஜாஸ்மின் ரோஜா, பாத்திமா, ஜெஸ்மினா பா்வீன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் அனைவருக்கும் வேட்டி, சேலை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதேபோல, பாஜக சாா்பில், அனைத்துத் தொகுதிகளிலும் நலத் திட்ட உதவிகள் வழங்கியும், கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தியும் அமைச்சரின் பிறந்த நாளைக் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com