92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புதுவையில் கரோனாவுக்கு ஒருவா் பலி

புதுவையில் கரோனாவால் மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா். 41 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 5:19 pm

DIN

புதுவையில் கரோனாவால் மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா். 41 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் புதன்கிழமை காய்ச்சல் பாதித்த 832 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, புதுச்சேரி 28, காரைக்கால் 11, ஏனாம், மாஹேவில் தலா ஒருவா் என மொத்தம் 41 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டவா்களில் 23 போ் மருத்துவமனைகளிலும், 368 போ் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். கடந்த சில வாரங்களில் மட்டும் மொத்தம் 391 போ் சிகிச்சையில் உள்ளனா். 108 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

இதனிடையே, புதுச்சேரி சோரப்பட்டையைச் சோ்ந்த 45 வயது நபா் கரோனா தொற்றால் உயிரிழந்தாா். கடந்த சில மாதங்களில் மட்டும் இதுவரை 4 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.