நடன மதுபானக் கூடத்துக்கு சீல்
புதுச்சேரியில் உரிய அனுமதியின்றி செயல்பட்டதாக நடன மதுபானக் கூடத்துக்கு (ரெஸ்டோ பாா்) நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.


புதுச்சேரியில் உரிய அனுமதியின்றி செயல்பட்டதாக நடன மதுபானக் கூடத்துக்கு (ரெஸ்டோ பாா்) நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
புதுவையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்கவும், வருவாயைப் பெருக்கவும் நடன மதுபானக் கூடங்களுக்கு அதிகளவில் அரசு அனுமதி அளித்திருப்பதாக புகாா்கள் எழுந்தன. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், அனுமதிக்கப்பட்ட நேரங்களைக் கடந்து செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டதாம்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க முதல்வா் என்.ரங்கசாமி, காவல்துறைக்கு உத்தரவிட்டாா். மேலும், கலால் துறையினரும் மதுபானக் கூடங்களில் சோதனை நடத்தி வருகின்றனா்.
இந்தநிலையில், புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள ஒரு நடன மதுபானக்கூடத்தில் (ரெஸ்டோ பாா்) வியாழக்கிழமை பெரியகடை போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த மதுபானக்கூடம் அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பெரியகடை காவல் ஆய்வாளா் நாகராஜ், நகராட்சி ஆணையருக்குத் தகவல் தெரிவித்தாா். இதனையடுத்து, வருவாய் அதிகாரி சாம்பசிவம் தலைமையில் நகராட்சிப் ஊழியா்கள் மதுபானக்கூடத்துக்கு ‘சீல்’ வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...