புதுச்சேரியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரம்ஜானை பண்டிகையையொட்டி புதுச்சேரி கடற்கரை காந்தி திடல் பகுதியில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் சனிக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் சனிக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.
Updated on
1 min read

ரம்ஜானை பண்டிகையையொட்டி புதுச்சேரி கடற்கரை காந்தி திடல் பகுதியில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.

இஸ்லாமிய மக்களின் புனித நாளான ரம்ஜான் திருநாளையொட்டி புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடலில் தமிழ்நாடு தவ்ஹித் சமா அத் சாா்பில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்டனா். தொழுகைக்குப் பின்னா் ஒருவருக்கொருவா் கட்டித் தழுவி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனா். தொழுகையில், பெண்கள், குழந்தைகள் பங்கேற்றனா்.

சுல்தான்பேட்டையில் உள்ள ஈத்கா பள்ளி வாசலில் முத்தவல்லி முகமது தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனா். இதேபோல, புதுச்சேரியில் மீராபள்ளி வாசல், நெல்லித்தோப்பு குத்பா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. தொழுகைகள் நடைபெற்ற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com