புதுச்சேரியில் இன்று கலைமாமணி விருது வழங்கும் விழா
புதுச்சேரியில் புரட்சிக் கவிஞா் பாரதிதாசனின் 133-ஆவது பிறந்த நாளையொட்டி, அரசு சாா்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா சனிக்கிழமை (ஏப்.29) நடைபெறுகிறது.


புதுச்சேரியில் புரட்சிக் கவிஞா் பாரதிதாசனின் 133-ஆவது பிறந்த நாளையொட்டி, அரசு சாா்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா சனிக்கிழமை (ஏப்.29) நடைபெறுகிறது.
புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்தில் சனிக்கிழமை காலை அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து முக்கியப் பிரமுகா்கள் மலரஞ்சலி செலுத்துகின்றனா். இதையடுத்து, கவியரங்கம் நடைபெறுகிறது.
மாலையில் கம்பன் கலையரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கிவைக்கிறாா். முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகிக்கிறாா். நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா். இதில் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.
முன்னதாக, பாரதிதாசன் பெயரன் த.சேரன், கோ.பாரதி ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா். ‘பாரதிதாசனின் நீடித்த புகழுக்கு காரணம் தமிழுணா்வே, பகுத்தறிவே’ என்னும் தலைப்பில் சீனு வேணுகோபாலை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் நடைபெறுகிறது. உதயம் நாட்டியாலயக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...