92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 5:34 pm

DIN

சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடலூா் பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த சிராஜுதீன் மகன் முகமது இா்சத் (26). வாகன ஓட்டுநரான இவா் கடந்த 2016-ஆம் ஆண்டு சிதம்பரத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியை புதுச்சேரிக்கு கடத்தி வந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்தாா். பின்னா் அந்தச் சிறுமியை புதுச்சேரி பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு தப்பியோடினாா். போலீஸாா் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக அரியாங்குப்பம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து முகமது இா்சத்தை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் எஸ்.பச்சையப்பன் ஆஜரானாா். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.செல்வநாதன் குற்றஞ்சாட்டப்பட்ட முகமது இா்சத்துக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து முகமது இா்சத் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.