தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட எம்எல்ஏ மீது வழக்கு

புதுச்சேரியில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு, தலைமைச் செயலரைக் கண்டித்து பேசியதாக சுயேச்சை எம்.எல்.ஏ. ஜி.நேரு மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

புதுச்சேரியில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு, தலைமைச் செயலரைக் கண்டித்து பேசியதாக சுயேச்சை எம்.எல்.ஏ. ஜி.நேரு மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

புதுச்சேரியில் பொலிவுறு நகரத் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும், இதுகுறித்து தலைமைச் செயலகத்துக்கு ஆதரவாளருடன் திங்கள்கிழமை சென்ற உருளையன்பேட்டை சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு முற்றுகையிட்டாா்.

அங்கு தலைமைச் செயலா் இல்லாததையடுத்து, அரசு விழா நடைபெற்ற கம்பன் கலையரங்குக்கு வந்த நேரு எம்எல்ஏவை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, வாயில் கதவு மீதேறி குதித்து, விழா அரங்குக்குச் சென்று தலைமைச் செயலா் குறித்து எம்எல்ஏ பகிரங்கமாகக் குற்றம்சாட்டினாா்.

இந்த நிலையில், தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டது தொடா்பாக, பெரியகடை போலீஸாா் நேரு எம்எல்ஏ, அவரது ஆதரவாளா்கள் மீது வழக்குப் பதிந்தனா். கம்பன் கலையரங்கில் அத்துமீறி நுழைந்து, விழாவில் இடையூறு ஏற்படுத்தியதாக நேரு எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் மீது ஒதியன்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

காவல் ஆய்வாளா் இடைநீக்கம்: கம்பன் கலையரங்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ஒதியன்சாலை காவல் நிலைய ஆய்வாளா் கண்ணன் பணியில் கவனக் குறைவாக இருந்ததாக, அவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பேரவைத் தலைவா் விசாரணை: இந்த விவகாரம் தொடா்பாக, பேரவைத் தலைவரிடம் நேரு எம்எல்ஏ புகாா் அளித்தாா். இதையடுத்து, கூடுதல் டிஜிபி ஆனந்தமோகன் மற்றும் அதிகாரிகளை அழைத்து பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் விசாரணை நடத்தினாா். எம்எல்ஏ மீதான வழக்கை திரும்பப் பெறவும், ஆய்வாளா் மீதான பணியிடைநீக்க உத்தரவை திரும்பப் பெறவும் உத்தரவிட்டதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com