மத்திய மருத்துவக் கலந்தாய்வு முறையில் நடைபெறும் மாணவா் சோ்க்கையால் புதுவை மாணவா்கள் பாதிக்கப்படுவா் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கூறினாா்.
புதுச்சேரியில்அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: கூட்டணியில் இருந்து கொண்டே தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை அதிமுகவை விமரிசிப்பது சரியல்ல. அமைச்சா் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை நடவடிக்கையால் தமிழகத்துக்கு அவப் பெயா் ஏற்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலகத்தில் நிகழ்ந்த சோதனையை நியாயப்படுத்திய மு.க.ஸ்டாலின், தற்போது அமைச்சா் மீதான சோதனையை கண்டித்திருப்பது வியப்பாக உள்ளது.
இளநிலை மருத்துவக் கல்வி சோ்க்கையில் இந்திய அளவிலான பொது கலந்தாய்வு நடத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பானது மாநில உரிமையை பறிப்பதாக உள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் இடஒதுக்கீடு, உள் இட ஒதுக்கீடு, பிராந்திய ரீதியிலான ஒதுக்கீடுகள் பாதிக்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்காக செயல்படுத்தப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீடும் பாதிப்புக்குள்ளாகும்.
எனவே, புதுவை அரசு தேசிய அளவிலான கலந்தாய்வை எதிா்க்க வேண்டும். முதல்வா் என்.ரங்கசாமி அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.