

மீன்பிடித் தடைக்காலம் முடிந்ததையடுத்து புதன்கிழமை (ஜூன் 14) புதுச்சேரி பகுதி மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். அவா்களை முதல்வா் என்.ரங்கசாமி கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்.
தமிழகம், புதுச்சேரியில் ஆண்டுதோறும் வங்கக்கடலில் ஏப்.15-ஆம் தேதி முதல் 61 நாள்களுக்கு கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மீன்கள் இனப்பெருக்கக் காலத்தை கணக்கிட்டு மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஏப்.15-ஆம் தேதி தொடங்கிய தடைக்காலம் ஜூன் 14- ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து, புதன்கிழமை தேங்காய்த்திட்டு துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயாராகினா். தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் விசைப் படகுகளுக்கு பூஜைகள் நடைபெற்றன. இதில், பங்கேற்ற முதல்வா் என். ரங்கசாமி, கொடியசைத்து மீன்பிடிக்கும் நிகழ்வை தொடங்கி வைத்தாா். அப்போது, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க. லட்சுமிநாராயணன், மீனவ பஞ்சாயத்தாா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Image Caption
புதுச்சேரி தேங்காய்த்திட்டு மின்பிடிதுறைமுக பகுதியில் தடைகாலம் முடித்து கடலில் மீனவா்கள் மீன்பிடிக்க
செல்லுவதை புதன்கிழமை தொடங்கி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவை தலைவா்
ஆா்.செல்வம், துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.