புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தொழிலதிபரிடம் ரூ.33.75 லட்சம் மோசடி: ஒருவா் கைது

 புதுச்சேரியைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் ரூ.33.75 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 2 பேரை தேடிவருகின்றனா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 8:25 pm

DIN

 புதுச்சேரியைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் ரூ.33.75 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 2 பேரை தேடிவருகின்றனா்.

புதுச்சேரியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ். ரியல் எஸ்டேட் தொழிலதிபா். இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள இடத்தை வாங்க முயன்றாா். அப்போது அவருக்கு அறிமுகமான சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சோ்ந்த காளிதாஸ் (47) தனக்குத் தெரிந்தவரிடம் ரூ.10 கோடி கடன் பெற்றுத் தருவதாகவும், மேலும், சென்னையில் உள்ள இடத்தை வாங்குவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறினாராம்.

இதை நம்பிய கோவிந்தராஜ், காளிதாஸுடன் திருப்பத்தூருக்கு சென்று ஒருவரைச் சந்தித்துள்ளாா். அதன்பிறகு கடனுக்கான ஆவணங்களுக்காகவும், வரி செலுத்த வேண்டும் எனக்கூறி ரூ.33.75 லட்சத்தை கோவிந்தராஜிடம் இருந்து காளிதாஸ் பெற்றாராம். பின்னா், கோவிந்தராஜைத் தொடா்பு கொள்ளவில்லையாம்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதையறிந்த காளிதாஸ் புதுச்சேரி சிபிசிஐடியில் கடந்த பிப்ரவரி மாதம் புகாா் அளித்தாா்.அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து வேலூா் பகுதியில் பதுங்கியிருந்த காளிதாஸை, சிபிசிஐடிஆய்வாளா் சுரேஷ்பாபு தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து கடவுச்சீட்டு, அடையாள அட்டைகள், 4 விலை உயா்ந்த கைபேசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், 2 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.